தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்தல்: இருவர் கைது

 மணல் கடத்தல்: இருவர் கைது

 மணல் கடத்தல்: இருவர் கைது


ADDED : பிப் 25, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கோசலநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கட்ராஜ், 50, சுப்பிரமணியம், 48. இவர்கள், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் திருத்தணி, ஆற்காடுகுப்பம் வழியாக பாயும் கொசஸ்தலையாற்றில் இருந்து மணலை திருடி, திருத்தணி மற்றும் கனகம்மாசத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் விற்று வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல ஆற்காடுகுப்பம் அருகே உள்ள கொசஸ்தலையாற்றில் மணல் திருடினர். பின், கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் கிராமத்தில் மணலை விற்பனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரகுநாதபுரம் அருகே வந்த போது வழிமறித்த கனகம்மாசத்திரம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், உரிய ஆவணங்கள் இன்றி டிராக்டரில் 4 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து, வெங்கட்ராஜ் மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us