ADDED : ஜன 29, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் டியோ இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் போலீசாரைக் கண்டதும் வாகனத்தை போட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் சென்று சோதனை செய்த போது டியோ இரு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்குப் பையில் மணல் திருடி வந்தது தெரிந்தது.
மப்பேடு போலீசார் இரு சக்கர வாகனம், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.