ADDED : செப் 15, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, செப். 16–
காஞ்சிபுரம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 30. இவர், திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், திருத்தணி பெரியார் நகரில் இயங்கி வரும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகில் உள்ள கல் குவாரி பகுதியில் நடந்து சென்ற போது, திடீரென கால் தவறி, கல் குவாரி பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், பாபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
