தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சம்பள உயர்வு வழங்க வேண்டும் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை

 சம்பள உயர்வு வழங்க வேண்டும் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை

 சம்பள உயர்வு வழங்க வேண்டும் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை


ADDED : டிச 18, 2025 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, நலவாரிய தலைவரிடம் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், துப்புரவு பணியாளர் குறைதீர் கூட்டம், தமிழக நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், துாய்மை பணியாளர், கழிவுநீர் வண்டி, பாதாள சாக்கடை பணியாளர் என, மொத்தம் 398 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினார். அவரிடம் துாய்மை பணியாளர்கள், 'நான்கு ஆண்டுகளாக தினசரி 410 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதை, 450 ரூபாயாக உயர்த்த வேண்டும். 'போனஸ்' கூட இதுவரை வழங்கவில்லை' என்றனர்.

அதன்பின், தமிழக நலவாரிய தலைவர் ஆறுச்சாமி கூறியதாவது:

துாய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு, தமிழக அரசு பாதுகாப்பு உபகரணம் வழங்கினாலும், அவற்றை அவர்கள் அணிவதில்லை.

இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை. எனவே, அரசு வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us