/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துாய்மை பணியாளர்கள் மாத சம்பளத்திற்கு காத்திருப்பு
/
துாய்மை பணியாளர்கள் மாத சம்பளத்திற்கு காத்திருப்பு
துாய்மை பணியாளர்கள் மாத சம்பளத்திற்கு காத்திருப்பு
துாய்மை பணியாளர்கள் மாத சம்பளத்திற்கு காத்திருப்பு
ADDED : பிப் 12, 2025 09:23 PM
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில், பம்ப் ஆப்பரேட்டர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும்.
இந்நிலையில், இம்மாதம், நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் அவர்கள், இந்த வருவாயை கொண்டே அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிட வேண்டிய நிலையில், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சம்பளத்திற்காக காத்திருக்கும் அவர்கள் கூறியதாவது:
இந்த சம்பளத்தை நம்பியே நாங்கள் இருக்கிறோம். அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக துாய்மை பணியாளர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.