ADDED : ஏப் 16, 2026 06:12 AM

அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் கர்லம்பாக்கம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி, ஊராட்சியில் பழுதடைந்த குப்பை தொட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளியின் நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவரில் கல்வி விழிப்புணர்வு குறித்த ஓவியங்களும், தேச தலைவர்களின் ஓவியங்களும் வரைந்து வைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், கர்லம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பள்ளி நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவரில் கற்றல் தொடர்பான ஓவியங்களையும், விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி வைக்க வேண்டும். மேலும், இங்குள்ள குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
