/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிணற்றில் சடலமாக பள்ளி மாணவர் மீட்பு
/
கிணற்றில் சடலமாக பள்ளி மாணவர் மீட்பு
ADDED : டிச 10, 2024 01:18 AM

கடம்பத்துார், டிகடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் யுகேஷ், 17. இவரது தாயார் லாவண்யா, 2008ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதையடுத்து இவரது தந்தை, பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏழாம் வகுப்பு வரை, ஆர்.எம்.ஜெயின் பள்ளியில் படித்து வந்த யுகேஷ் பள்ளிக்கு சரியாக செல்லாத காரணத்தினால் பின், ஞானவித்யாலயா பள்ளியில் சேர்ந்து தற்போது பிளஸ் 2 படித்து வந்தார்.
வீட்டில் சரியாக படிக்காததால் சித்தி பிரியா திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாலை, வீட்டிலிருந்த யுகேஷ் திடீரென மாயமானார். பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, இப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். கடம்பத்துார் போலீசார் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, செல்வம் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

