நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசலு, 46. இவரது 17 வயது மகன், 11ம் வகுப்பு படித்து வந்தான்.
சிறுவன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அடிக்கடி சென்னைக்கு சென்று வந்துள்ளான்.
கடந்த 1ம் தேதி, தந்தையிடம் சென்னைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவன் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சீனிவாசலு கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

