/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
லட்சுமி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 10, 2025 01:57 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது லட்சுமி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, 1,000க்கும் ் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
இங்கு, மாணவ - மாணவியர் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடந்தது. ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்.ஐ., பிரசன்னவரதன் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
இதில், மாணவ - மாணவியர் ஒளிப்படக்காட்டி, க்ளோப் தியேட்டர், போதை பழக்கத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு, நீரின் வாயிலாக மின்சார உற்பத்தி ஆகிய படைப்புகளை பார்வைக்காக வைத்தனர். இதை, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட்டனர். தாளாளர் சுகந்தி, மேலாளர் வேதா, முதல்வர் பரமசிவன், தலைமையாசிரியர் லட்சுமணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

