ADDED : ஜன 29, 2026 06:55 AM

அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை, பள்ளி தாளாளர் பாலாஜி துவக்கி வைத்தார்.
இதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அறிவியல் தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டது.
மேலும், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பழம், காய்கறிகள் போல் வேடமணிந்து, அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். இதில், பள்ளி முதல்வர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
