ADDED : பிப் 17, 2025 11:06 PM

திருத்தணி,சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரியில், திருவள்ளூர் மாவட்ட அளவில் பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின் அடிப்படை பயிற்சி முகாமை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சாரணர்களுக்கான பயிற்சியை வட சென்னை மாவட்ட அமைப்பு ஆணையர் துாயவன், சாரணியர்களுக்கான பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட பயிற்சி ஆணையர் டாக்டர் கேத்திபயஸ் அளித்தனர்.
பயிற்சியில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லூரி மாணவர்களுடன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
பயிற்சி நிறைவு விழா நேற்று, மாவட்ட செயலர் டாக்டர் சாம்சன் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு ஆணையர் முனைவர் முரளி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பயிற்சி ஆணையர் எபிநேசர் பயிற்சி முகாமினை வழி நடத்தினார். முகாமில், ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராதிகா பங்கேற்று, பயிற்சி பெற்றதற்கான சாரண - சாரணியருக்கு சான்றுகள் வழங்கினார்.

