ADDED : மார் 02, 2024 10:09 PM

அ நிறம் | அளவு
திருத்தணி:திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரத் சாரண - சாரணியர் ஒரு நாள் முகாம் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளித் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் துரைகுப்பன் வரவேற்றார். இதில் பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சாரண - சாரணிய ஆசிரியர்கள் ராமன், சர்மிளா, எமிமா ஆகியோர் செய்திருந்தனர். சாரண ஆசிரியை சர்மிளா நன்றி கூறினார்.
