/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மீது லாரி மோதி காவலாளி உயிரிழப்பு
/
பைக் மீது லாரி மோதி காவலாளி உயிரிழப்பு
ADDED : மார் 31, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு, 52. மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காவலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கன்னிகைப்பேர் சாலையில் உள்ள மணல்மேடு கிராம சுடுகாடு வளைவு அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.