ADDED : ஜன 12, 2025 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் அருகே, மின்சாரம் பாய்ந்து காவலாளி இறந்தார்.
மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயபால், 37. தனியார் தொழிற்சாலை காவலாளி.
நேற்று முன்தினம் மாலை, அதே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, துணி உலர்த்தும் கொடி கம்பியை அவர் தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.