ADDED : அக் 29, 2024 03:48 AM
திருவள்ளூர் : அதிக மகசூல் பெற தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை மைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இடுபொருள் விதை. தரமான விதைகளை தேர்ந்தெடுத்துபயிரிட்டால் மட்டுமே அதிக மகசூல் கிடைக்கும்.
தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில்,வயல் மட்ட ஆய்வு மற்றும்விதை பரி சோதனை செய்யப்பட்டவைகள் தான் விதைப்பரிசோதனைநிலையத்தில் புறத் துாய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிறரக கலப்பு என, நான்கு விதமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிக மகசூல் பெற்று, லாபம் பெறவும், இடுபொருள் செலவை குறைக்கவும், எண்.48, ஜெ.என்.சாலை, ஆயில் மில் நிறுத்தம், பெரியகுப்பம், திருவள்ளூர் என்ற முகவரியில் இயங்கும் விதை பரிசோதனை மையத்தை அணுகலாம்.
விதை பரிசோதனை கட்டணம், 80 ரூபாய் செலுத்தி, தரமான விதையை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.