/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாற்று விற்பனை பள்ளிப்பட்டில் ஜோர்
/
நாற்று விற்பனை பள்ளிப்பட்டில் ஜோர்
ADDED : டிச 29, 2024 02:21 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் விவசாயிகள் உணவு பயிர்களுடன், காய்கறி மற்றும் மலர் சாகுபடியும் செய்து வருகின்றனர். காய்கறிகளில், கத்தரி, வெண்டை, அவரை, முள்ளங்கி உள்ளிட்டவற்றுடன் மிளகாய் தோட்டமும் அமைத்து பராமரிக்கின்றனர்.
இதையொட்டி, பள்ளிப்பட்டு நகரில் சனிக்கிழமைகளில் கூடும் வார சந்தையில், பாரம்பரியமாக காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கனமழை பெய்து ஓய்ந்துள்ள நிலையில், விவசாயிகள் காய்கறி பயிரிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு வார சந்தையில் நேற்று காய்கறி நாற்று அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது. கத்தரி நாற்று ஒரு கட்டு, 40 ரூபாய்க்கும், மிளகாய் நாற்று ஒரு கட்டு, 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகள் மற்றும் மாடி தோட்டம் அமைக்கும் பெண்களும் நாற்றுகளை அதிகளவில் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினர்.
ஆர்.கே.பேட்டை வார சந்தையில் காய்கறி நாற்று விற்பனை செய்யப்படுவது இல்லை என்பதால், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் நேற்று, பள்ளிப்பட்டு வார சந்தையில் காய்கறி மற்றும் மிளகாய் நாற்றுகளை வாங்கி சென்றனர்.