தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/100 கிலோ பிளாஸ்டிக் திருத்தணியில் பறிமுதல்

100 கிலோ பிளாஸ்டிக் திருத்தணியில் பறிமுதல்

100 கிலோ பிளாஸ்டிக் திருத்தணியில் பறிமுதல்


UPDATED : நவ 27, 2026 07:52 PM

ADDED : நவ 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 07:52 PM ADDED : நவ 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருத்தணி நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக, கலெக்டருக்கு புகார் சென்றது.

இதையடுத்து, கலெக்டர் கவிதா உத்தரவின்படி, திருத்தணி நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள், நேற்று திருத்தணி – அரக்கோணம் சாலை, ம.பொ.சி.,சாலை, அக்கய்யநாயுடு சாலை மற்றும் சன்னிதி தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உட்பட, மொத்தம் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவற்றை விற்ற கடைகளுக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

‘தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும்’ என, கமிஷனர் கன்னியப்பன் எச்சரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us