ADDED : டிச 19, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில், தமிழக அரசின் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, மப்பேடு காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருப்பந்தியூர் ஊராட்சியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பவன்குமார், 35, என்பவரது, கடையில் விற்பனைக்காக வைக்கபப்ட்டிருந்த தடை செய்யப்பட்ட போதை பொருள்களான ஹான்ஸ் 35 பாக்கெட், ஸ்வாகத், 2 பாக்கெட் என, மொத்தம் 21 கிலோ எடை கொண்ட போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், பவன்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.