/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சேக்கிழார் திருமுறை பெருவிழா
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சேக்கிழார் திருமுறை பெருவிழா
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சேக்கிழார் திருமுறை பெருவிழா
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சேக்கிழார் திருமுறை பெருவிழா
ADDED : ஜன 27, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலின் காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் நேற்று , சேக்கிழார் திருமுறை பெருவிழா மற்றும் மாநாடு நடந்தது.
திருவாலங்காடைச் சேர்ந்த தேவசேனன் பெருவிழா மாநாட்டை துவங்கி வைத்தார். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருமுறை ஓதுவார்கள் பங்கேற்றனர்.
திருவாலங்காடின் முக்கிய வீதிகள் வழியாக சேக்கிழார் திருமறை ஒலிக்க சுற்றி வந்தனர்.
இதில், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.