/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி
/
ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி
ADDED : பிப் 07, 2025 09:54 PM
திருவள்ளூர்:ஆதரவற்ற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தினை துவக்கி உள்ளது.
இந்த நலவாரியம் வாயிலாக, சுயதொழில் மேற்கொள்வதற்கான, வங்கி கடன் மற்றும் பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சியினை பெற, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த இணையதளத்தில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், இ- -- சேவை மையம் அல்லது மொபைல்போனை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.