/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட சுயஉதவி குழு கட்டடம்
/
பாதியில் நிறுத்தப்பட்ட சுயஉதவி குழு கட்டடம்
ADDED : டிச 23, 2024 03:05 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, 2017 - 18ம் ஆண்டு, 70.75 லட்சம் ரூபாயில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கட்டடம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்து, பணிகள் துரித வேகத்தில் நடந்தன.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் சுயஉதவிக் குழு கட்டட பணிகள் முழுமையாக நடக்காமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தற்போது, இக்கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதால் அவ்வப்போது, அடிதடி தகராறுகள் நடக்கின்றன.
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, ஊராட்சி நிர்வாகம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, கலெக்டர், நேரில் பார்வையிட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.