/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் இன்று துவக்கம்
/
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் இன்று துவக்கம்
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் இன்று துவக்கம்
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட் சென்னையில் இன்று துவக்கம்
ADDED : பிப் 17, 2024 11:23 PM
சென்னை, வி.சி.ஐ., எனும், வெடரன் கிரிக்கெட் இந்தியா அமைப்பு சார்பில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடத்தப்படுகிறது.
இன்று துவங்கி மார்ச் 2ம் தேதி வரை நடக்கும் போட்டியில், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. 'லீக் கம் நாக் - அவுட்' முறையில், 45 ஓவர்கள் அடிப்படையில், சென்னையில் பல்வேறு மைதானங்களில், போட்டிகள் நடக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் ஸ்கோரர்களும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஸ்கோரர்களும், இந்த போட்டிகளுக்கு பணியாற்றுகின்றனர்.
போட்டியின் துவக்க விழா, இன்று மாலை 3:00 மணிக்கு வி.ஜி.பி., ரிசார்ட் வளாகத்தில் நடக்கிறது.
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றனர் என, போட்டி குழு தலைவர் ரவிராமன், ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.