/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கத்துார் ஏரி நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்

ADDED : டிச 09, 2024 02:13 AM

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இங்கு, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குமரன் நகர் பகுதியில் வெங்கத்துார் ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி, வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரிக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயில் விடப்படுகிறது.
இதனால், ஏரிக்கு வரும் நீர் மாசுபடுவதோடு, ஏரியில் உள்ள நீரும் வீணாகி பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து வெங்கத்துார் ஏரிக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.