/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்
/
திருமழிசை பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்
திருமழிசை பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்
திருமழிசை பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்
ADDED : நவ 11, 2024 03:03 AM

திருவள்ளூர்,:திருமழிசை பேரூராட்சி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை.
இந்த மருத்துவமனையை திருமழிசை, மேல்மண்பேடு, வெள்ளவேடு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நுழை வாயில் அருகே பயணியர் மற்றும் பகுதிவாசிகள் பயன்படுத்தும் கட்டண கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறை போதிய பராமரிப்பில்லாததால் கழிவுநீர் பேருந்து நிலைய வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை நுழைவு வாயில் முன் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் பஸ் நிலையம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டண கழிப்பறையை சீரமைத்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள், பயணியர் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.