கும்மிடி சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் குளம் போல் தேக்கம்
கும்மிடி சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் குளம் போல் தேக்கம்
UPDATED : ஜூலை 04, 2026 07:36 PM
ADDED : ஜூலை 04, 2026 07:31 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மின் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், குளம் போல் தேங்கியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீரை அகற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மூன்றாவது பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே, மின் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடம் உள்ளது. அந்த இடத்தில், தொழிற்சாலைகளின் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. குளத்தில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள், வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன.
கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் நிலத்தடி நீரை கடுமையாக பாதிக்கும் என்பதால் உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளையும், கழிவுநீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
