/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 12:48 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்கள் துார் வாரப்படாமல் கிடக்கின்றன. குறிப்பாக, மத்துார் செல்லும் சாலையில், செல்வ விநாயகர் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய் துார்ந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது.
இதனால், இந்த தெருவில் துர்நாற்றம் வீசுகிறது. புதரில் கொசுக்கள் வளர்கின்றன.
பகுதிவாசிகள் கொசு தொல்லையாலும், துர்நாற்றத்தாலும் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும் மத்துாருக்கு இந்த தெரு வழியாக வாகனங்களில் செல்பவர்கள், கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியாமல், எதிரெதிரே வாகனங்கள் கடக்கும்போது, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
பகுதிவாசிகள் நலன் கருதி, கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.