/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி விழா
/
சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி விழா
ADDED : பிப் 16, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இங்கு நடைபெறும் விழாக்களில் மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது.
வரும், 18ல் இவ்விழா வினாயகர் பூஜையுடன் விழா துவங்குகிறது. மறுநாள், 19ம் தேதி துவங்கி, 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது.
தினமும் காலை சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும், 27ம் தேதி இரவு, 6:30 மணிக்கு அன்னை மரகதாம்பிகை, வால்மிகீஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.