/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெட்ரோல் பதுக்கி விற்ற கடைக்காரர் கைது
/
பெட்ரோல் பதுக்கி விற்ற கடைக்காரர் கைது
ADDED : ஜன 31, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, 38. இவர், திருவாலங்காடு --- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இவர், பெட்ரோலை பதுக்கி விற்பதாக, திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, எஸ்.ஐ., இளங்கோ கடையில் ஆய்வு செய்தார்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 200 லிட்டர் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார், முத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.