/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் விரைவில் நிரந்தர தீர்வு: கலெக்டர்
/
பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் விரைவில் நிரந்தர தீர்வு: கலெக்டர்
பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் விரைவில் நிரந்தர தீர்வு: கலெக்டர்
பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் விரைவில் நிரந்தர தீர்வு: கலெக்டர்
ADDED : அக் 07, 2025 11:38 PM
திருத்தணி:“திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் வைத்திருந்தவர்களுக்கு, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்,” என, கலெக்டர் பிரதாப் உறுதியளித்தார்.
திருத்தணி முருகன் கோவில் நுழைவாயில் மற்றும் தேர்வீதியில், பக்தர்களுக்கு இடையூறாக பழங்கள், தின்பண்டங்கள், கயிறுகள் உள்ளிட்ட கடைகள், 100க்கும் மேற்பட்டோர் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், கட்டாயமாக பொருட்கள் வாங்க வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர். இதனால், தேர்வீதியில் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கோவில் நிர்வாகம், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர்.
இதையடுத்து, கடை வியாபாரிகள் ஒன்றிணைந்து, முதல்வரை சந்தித்து மனு அளிக்க சென்ற போது, திருவள்ளூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காணப்படும் என, சமரசம் செய்து அனுப்பினர்.
நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஆர்.டி.ஓ., கனிமொழி, தாசில்தார் மலர்விழி ஆகியோர், திருத்தணி கோவிலில் ஆய்வு செய்தனர். பின், வியாபாரிகளிடம் பேச்சு நடத்தி, 'பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் வைக்கக்கூடாது' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, 'விரைவில் தற்காலிக கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படும்' என உறுதியளித்தார்.