/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் நிழற்குடை ஆக்கிரமித்து கடைகள்
/
பஸ் நிழற்குடை ஆக்கிரமித்து கடைகள்
ADDED : நவ 03, 2024 02:09 AM

திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி.கண்டிகையில் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், இங்குள்ள பேருந்து நிறுத்ததத்திற்கு, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள, 40 கிராமங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்டோர், திருத்தணி மற்றும் சோளிங்கர் மார்க்கத்திற்கு பேருந்து வாயிலாக செல்கின்றனர்.
அதிகாலை 5:00 - இரவு 10:00 மணி வரை, எப்போதும் 100க்கும் மேற்பட்ட பயணியர் வருவர். எனவே, பயணியர் நலன் கருதி, ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து இரண்டு பேருந்து நிழற்குடை அமைத்தது.
ஆனால், நிழற்குடையை ஆக்கிரமித்து சிலர் தேங்காய், பூ மற்றும் டிபன் கடை வைத்துள்ளனர். இதனால், பயணியர் நிழற்குடை செல்ல முடியாமல் மழை, வெயிலில் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிழற்குடை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.