ADDED : செப் 25, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை, செப். 26-–
‘டைல்ஸ்’ கற்கள் விற்பனை செய்யும் கடையில், பொருட்களுடன் ‘சி.சி.டி.வி’ கேமராவையும், கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கசவான்குப்பம் கிராமத்தை சேர்ந்த அஜித், 29, என்பவர், ஆர்.கே.பேட்டை அடுத்த பத்மாபுரத்தில், ‘டைல்ஸ்’ கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடைக்கு வந்த அஜித், கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் பின்பக்க கூரையை அகற்றி உள்ளே நுழைந்த திருடர்கள், திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
கடையில் இருந்த பொருட்களுடன், ‘சி.சி.டி.வி’ கேமராவௌயும், காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்., சாதனத்தையும் சேர்த்து திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
