/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு 'டிமிக்கி'; அரசு மருத்துவமனை ஊழியர்கள் 35 பேர் சம்பளம் 'கட்'
/
கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு 'டிமிக்கி'; அரசு மருத்துவமனை ஊழியர்கள் 35 பேர் சம்பளம் 'கட்'
கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு 'டிமிக்கி'; அரசு மருத்துவமனை ஊழியர்கள் 35 பேர் சம்பளம் 'கட்'
கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு 'டிமிக்கி'; அரசு மருத்துவமனை ஊழியர்கள் 35 பேர் சம்பளம் 'கட்'
ADDED : மார் 05, 2025 01:30 PM

- நமது நிருபர் குழு -
திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையிலான சட்டசபை உறுதிமொழி குழுவினர், கலெக்டர் பிரதாப் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று, திருத்தணி முருகன் கோவிலில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் யானை வழங்கும் உறுதிமொழி குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, வனத்துறை சட்டம் காரணமாக, யானை கொண்டு வரப்படவில்லை என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டனர்.
சுற்றுச்சுவர் கட்டப்பட பயன்படுத்திய செங்கல் தரமற்றதாக இருந்ததால், தரமான செங்கல் வாங்கி கட்டுமான பணியை துவக்குமாறு அறிவுறுத்தியது. திருவாலங்காடு பகுதியில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை, சட்டசபை உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது, விவசாயிகள், 'திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1984ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இயந்திரம் பழமையானதால் ஆலையில் அரவை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
'இதனால் மாவட்டத்தில் உற்பத்தியாகும் 5 லட்சம் டன் கரும்பை அரைக்க முடியாமல், ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதை தடுக்க ஆலையை நவீனமயமாக்க வேண்டும்' என்றனர்.
மேலும், '168 கோடி ரூபாய் மதிப்பில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து பெற்றுத்தர முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும்' என்றார்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட 'ஷட்டர்'களை குழுவினர் பார்வையிட்டனர். எட்டாம் நம்பர் 'ஷட்டரில்' நீர்க்கசிவு இருப்பதை சுட்டிக்காட்டி, விரைந்து சரிசெய்ய குழு உத்தரவிட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததை சுட்டிக்காட்டி மருத்துவமனை டீனிடம் விளக்கம் கேட்டனர். பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விவரத்தினை திருவள்ளூர் ஆர்.டி.ஓ., விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் சட்டசபை உறுதியளித்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன்பின், குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'கிறிஸ்டல்' நிறுவனம் வாயிலாக 220 ஊழியர்களுடன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், 35 பேர் கையெழுத்து போட்டு விட்டு, பணிக்கு வராமல் உள்ளனர். அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை நிறுத்தம் செய்ய, மருத்துவ துறை செயலருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மேலும், 'கிறிஸ்டல்' நிறுவனம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்டத்தில், 290 உறுதிமொழி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் நிறைவேற்றப்படாத பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.