/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எழுத்துப்பிழைகளுடன் வழிகாட்டி பலகைகள்
/
எழுத்துப்பிழைகளுடன் வழிகாட்டி பலகைகள்
ADDED : ஜன 30, 2024 12:47 AM

மீஞ்சூர் : மீஞ்சூர்- -- வண்டலுார் வெளிவட்ட சாலையில் இருந்து, அணுகு சாலை வழியாக கிராம சாலைகளுக்கு பிரியும் இடங்களில், கிராமங்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவை எழுத்து பிழையுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.'மடியூர்' என்பதற்கு பதிலாக 'மோதியூர்', 'கொடிப்பள்ளம்' என்பதற்கு பதிலாக 'கோடிப்பள்ளம்', 'மாபுஸ்கான்பேட்டை' என்பதற்கு பதிலாக 'மாபஸ்காபேட்', 'சோழிப்பாளையம்' என்பதற்கு பதிலாக 'சோலிப்பாளையம்', 'ஒரக்காடு' என்பதற்கு பதிலாக 'ஓரக்காடு' என எழுத்து பிழைகளுடன் உள்ளன.
எழுத்து பிழைகளுடன் உள்ள கிராமங்களின் பெயர் பலகைகளை சரியாக எழுதி வைத்திட வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.