ADDED : மார் 12, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணியில் பூட்டிய வீட்டில், 500 கிராம் வெள்ளி, 5,000 ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர், 58; லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாததால், மனைவி முனிலட்சுமி, 54, மகன் திருமலையேஷ், 29, ஆகியோருடன் வீட்டு மாடியில் துாங்கினார்.
அதிகாலை வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 500 கிராம் வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் மற்றும் இரண்டு மொபைல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
