/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம்
ADDED : ஜூலை 12, 2025 11:49 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, சிங்கப்பூர் அமைச்சர் தரிசனம் செய்தார்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு நடந்த பஞ்சாமிர்த அபிஷேக நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் பங்கேற்று, அபிஷேகம் நடத்தி வழிபட்டார்.
நேற்று காலை 7:00 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து திருத்தணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்திற்கு வந்து, அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.
மேலும், அமைச்சர் சண்முகம் கொடிமரம், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பின், கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 9:45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.