/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
/
சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
ADDED : ஜன 31, 2024 11:55 PM
திருத்தணி:மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் டத்தோ ராமேஸ்வரி, 59. இவர் நேற்று முன்தினம் திருத்தணி சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, தன் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த காயத்ரி, 38, என்பவருக்கு பொது அதிகாரம் பத்திரப்பதிவு செய்வதற்கு முறையாக டோக்கன் வாங்கினார்.
இவருக்கு பகல் 12:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, பத்திரம் பதிவு செய்வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இரவு 8:45 மணி ஆகியும் பத்திரப்பதிவு முடிந்து, புதிய ஒரிஜனல் பத்திரம் வழங்காமல் காலம் தாழ்த்தியும், நாளை வருமாறு சார் - -பதிவாளர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி, திடீரென பெட்ரோல் கேனுடன் சார்- - பதிவாளர் அலுவலகம் முன் வந்து போராட்டம் செய்தார். இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.