/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறை அவசியம்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறை அவசியம்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறை அவசியம்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறை அவசியம்
ADDED : ஜன 19, 2025 02:42 AM
கும்மிடிப்பூண்டி,சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே, சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
அங்கு, தினசரி நுாற்றுக்கணக்கானோர், பத்திர பதிவு தொடர்பாக வந்து செல்கின்றனர்.
அங்கு வரும் பொதுமக்கள், பத்திரப் பதிவின்போது மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் மட்டும் அலுவலகத்தில் உள்ள சில இருக்கைகளில் அமருகின்றனர்.
எஞ்சிய நுாற்றுக்கணக்கான மக்கள், அலுவலகத்தின் வெளிபுறம், எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ், அப்பகுதிகளில் உள்ள டீக்கடைகளிலும் காத்திருக்கின்றனர்.
இதனால் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே காத்திருப்பவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலில் சுற்றி திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அங்கு வரும் மக்களின் பாதுகாப்பு கருதி, அலுவலக வளாகத்தில், காத்திருப்போர் அறை அமைத்து, போதிய இருக்கை வசதிகளும்ஏற்படுத்த வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

