/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணி 22 லட்சம் படிவம் வினியோகம்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணி 22 லட்சம் படிவம் வினியோகம்
எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணி 22 லட்சம் படிவம் வினியோகம்
எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணி 22 லட்சம் படிவம் வினியோகம்
ADDED : நவ 13, 2025 08:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்காக, 10 தொகுதியிலும் இதுவரை, 22 லட்சம் படிவம் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், 35.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு வாக்காளருக்கும், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் படிவம் வழங்கி வருகின்றனர்.
இதுவரை, 22 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வினியோகிக்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும். அதன்பின், படிவம் கொடுக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள், பூர்த்தி செய்தவற்றை திரும்ப பெறப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத பணியை விரைந்து முடிக்க, 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

