sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சீதா ராமர் திருக்கல்யாணம்

/

சீதா ராமர் திருக்கல்யாணம்

சீதா ராமர் திருக்கல்யாணம்

சீதா ராமர் திருக்கல்யாணம்


ADDED : மார் 30, 2023 11:10 PM

Google News

ADDED : மார் 30, 2023 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ராம நவமி உற்சவத்தின் நிறைவாக நேற்று முன்தினம் சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ராம நவமி உற்சவத்தை ஒட்டி, கடந்த வாரம் முதல் ஆர்.கே.பேட்டை கோதண்ட ராம சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. தினசரி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் ஆராதனையும், மாலையில் பஜனையும் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. திரளசன பக்தர்கள், மலர் மாலைகள், பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசையுடன் இதில் கலந்து கொண்டனர். கோவில் மண்டபத்தில் சீதா, லட்சுமணருடன் எழுந்தருளிய சுவாமி, மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போல், பள்ளிப்பட்டு ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது.

ஸ்ரீ ராம நவமி மஹா அபிஷேகம்


கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி கோவில். ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, நேற்று காலை, சீதா ராம லட்சுமண அனுமந்த் சுவாமிகளின் உற்சவ சிலைகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடி இருந்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றன. மாலையில், சுவாமிகள் கோவிலை வளம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தாசரதி ஸ்ரீகல்யாண ராமர் கோவில்


இராமன்கோவில்:கடம்பத்துார் ஒன்றியம் இராமன்கோவில் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீஸீதா லகக்ஷ்மண ஹனுமத் சமேத தாசரதி ஸ்ரீகல்யாண ராமர் திருக்கோயில்.

இந்த கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா நேற்று துவங்கி வரும் ஏப். 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ராம நவமி உற்சவ விழாக்காலஙகளில் மாலை திருமஞ்சனமும், சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்கு கொடியேற்றுதல் ஜனனம் நிகழ்ச்சியுடன் ஸ்ரீராம நவமி உற்சவ திருவிழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் வரும் 7 ம் தேதி கமாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும். இதேபோல் ஸ்ரீராமர் பட்டாபிேஷகம் வரும் 8 ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும்.

வரும் 9ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் ஸ்ரீராம நவமி உற்சவ திருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us