/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவானந்த கேந்திரம் கோவில் ஆண்டு விழா
/
சிவானந்த கேந்திரம் கோவில் ஆண்டு விழா
ADDED : பிப் 04, 2025 01:02 AM
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில், சுவாமி சிவானந்த சித்தவித்தை யோகாப்யாச கேந்திரம் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி, சித்திரை மாத பவுர்ணமி, குரு பவுர்ணமியாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் பிப்.,3ம் தேதி ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நேற்று, 61ம் ஆண்டு விழா நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நுாற்றுக்கணக்கான சித்தர்கள் மற்றும் சீடர்கள் பங்கேற்றனர். ஆன்மிக சொற்பொழிவு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆண்டு விழாவின் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சின்னிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

