sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிப்காட் வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் திருடிய 6 பேர் கைது

/

சிப்காட் வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் திருடிய 6 பேர் கைது

சிப்காட் வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் திருடிய 6 பேர் கைது

சிப்காட் வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் திருடிய 6 பேர் கைது


ADDED : ஜூலை 21, 2011 12:57 AM

Google News

ADDED : ஜூலை 21, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சிப்காட் வளாகத்தில், 10 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்களை திருடிய வாட்ச்மேன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி பகுதியில், சிப்காட் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த இயந்திரங்களும், அலுவலக சம்பந்தமான பொருட்களும் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது.புதுகும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 43, என்பவர் அங்கு வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இம்மாதம், 10ம்தேதி இரவு மர்ம நபர்கள் சிலர், பாதுகாப்பு பணியிலிருந்த ராமச்சந்திரனை தாக்கிவிட்டு, அங்கிருந்து இயந்திரங்களை கொள்ளையடித்து சென்றனர். அதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.இது குறித்து, சிப்காட் நிறுவன இளநிலை பொறியாளர் சேவியர், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அசோக்மேத்தா, வேணுகோபால் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.இயந்திரங்கள் கொள்ளைபோன குடோனை ஆய்வுசெய்த போது, அதன் ஷெட்டர் பூட்டுகள் உடைக்கப்படாமல் திறக்கப்பட்டிருந்தது. சந்தேகத்தின்பேரில் வாட்ச்மேன் ராமச்சந்திரனை, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொள்ளை சம்பவத்தில், ராமச்சந்திரன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார், வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், 45, பன்னீர்செல்வம், 49, சங்கர், 26, துரை, 31, தர்மலிங்கம், 48, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us