தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எலும்புக்கூடான மின்கம்பம் ரேஷன் பயனாளர்கள் அச்சம்

 எலும்புக்கூடான மின்கம்பம் ரேஷன் பயனாளர்கள் அச்சம்

 எலும்புக்கூடான மின்கம்பம் ரேஷன் பயனாளர்கள் அச்சம்


ADDED : பிப் 28, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: பெரியகளக்காட்டூரில் ரேஷன் கடை அருகே உள்ள மின்கம்பம் எலும்புக்கூடாக மாறி, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், பயனாளர்கள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுக்கள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது.

இதனால், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், எப்போது மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மின்வாரியத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us