/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் 7,910 பேருக்கு திறன் பயிற்சி
/
மாணவர்கள் 7,910 பேருக்கு திறன் பயிற்சி
ADDED : டிச 18, 2024 12:35 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு, 10 லட்சம் இளைஞர்களின் கல்வி, ஆற்றல், திறன் ஆகியவற்றை மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதே முக்கிய நோக்கம்.
அதன் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து, சிறப்பு பயிற்சியுடன்கூடிய நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, 32 பொறியியல் கல்லுாரியில் 2,468 மாணவர்கள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 5,442 மாணவர்கள் என, மொத்தம் 7,910 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று பல்நோக்கு திறன் கொண்டவர்களாக தேவைப்படும் திறனுடன் பணியமர்த்தப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.