தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சத்தரை மேம்பால பணி மந்தம்: வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

சத்தரை மேம்பால பணி மந்தம்: வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

சத்தரை மேம்பால பணி மந்தம்: வாகன ஓட்டிகள் கடும் சிரமம்


UPDATED : ஜூலை 21, 2026 03:58 PM

ADDED : ஜூலை 21, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 03:58 PM ADDED : ஜூலை 21, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்: சத்தரை பகுதியில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், மப்பேடு - கொண்டஞ்சேரி இடையே, சத்தரை பகுதியில் சத்தரை ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலம், மழை காலங்களில் வெள்ள நீர் வரும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இப்பகுதியில், 3.50 கோடி ரூபாயில், 36 மீட்டர் நீளத்தில், 12.95 மீட்டர் அகலத்தில், எட்டு மாதங்களில் நிறைவேற்றும் வகையில், புதிய மேம்பாலம் கட்டும் பணியை, கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கினர்.

அதன்பின், கடந்த ஓராண்டாக, இந்த மேம்பால பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us