/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளியில் புகுந்த பாம்பு மாணவர்கள் ஓட்டம்
/
பள்ளியில் புகுந்த பாம்பு மாணவர்கள் ஓட்டம்
ADDED : டிச 21, 2024 01:13 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி, பெரியகாலனி அரசு துவக்கப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில் பாம்புகள் சுற்றி திரிவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மதியம் உணவு இடைவேளைக்கு பின் வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று செல்வதை கண்டனர்.
அதையடுத்து மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினர். பள்ளி ஆசிரியர்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளியின் கழிவறை பகுதியில் பதுங்கியிருந்த, மூன்று அடி நீளமுள்ள நீர்ப்பாம்பை பிடித்தனர்.
பள்ளி வளாகத்தில் சூழ்ந்துள்ள புதர்களை அகற்றவும், சேதமடைந்த பள்ளி சுற்று சுவரை சீரமைக்கவும் பூண்டி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்காததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.

