/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் பதுங்கிய பாம்பு மீட்பு
/
வீட்டில் பதுங்கிய பாம்பு மீட்பு
ADDED : ஆக 25, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு :வீட்டில் பதுங்கிய பாம்பு, தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை, திரவுபதியம்மன் கோவில் எதிரே உள்ள அண்ணாமலை என்பவரின் வீட்டில், நேற்று காலை பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, பள்ளிப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்களுக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த மீட்பு படை வீரர்கள், பதுங்கி இருந்த கொம்பேரிமூக்கன் பாம்பை பிடித்தனர்.
பின், பள்ளிப்பட்டு அடுத்த புல்லுார் காப்புக்காட்டில் பாம்பு விடப்பட்டது.