/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாம்பு படையெடுப்பு வங்கனுாரில் அச்சம்
/
பாம்பு படையெடுப்பு வங்கனுாரில் அச்சம்
ADDED : நவ 16, 2024 01:37 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தென்மேற்கு மற்றும் வடமேற்கில் இரண்டு ஏரிகளும், தென்கிழக்கில் மலையும், வடகிழக்கில் இரண்டு குளங்களும் அமைந்துள்ளன.
நீர் வளமும், நில வளமும் மிக்க இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சின்னபிள்ளையார் கோவில் தெருவில் நல்ல பாம்பு ஒன்று படம் விரித்து ஆடியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதிவாசிகள், இயற்கை ஆர்வலர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நபர்கள், நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, பாதுகாப்பாக காப்புக்காட்டில் விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஒரு நல்ல பாம்பு அதே பகுதியில் ஒரு வீட்டில் காணப்பட்டது. அந்த பாம்பும் மீட்கப்பட்டு, காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டது. அடுத்தடுத்து நல்ல பாம்புகள் மீட்கப்பட்டு வருவதால், வங்கனுார் பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.