/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ' கூவம் ஆறு கரையோரம் குப்பை குவியல்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ' கூவம் ஆறு கரையோரம் குப்பை குவியல்
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ' கூவம் ஆறு கரையோரம் குப்பை குவியல்
திடக்கழிவு மேலாண்மை திட்டம் 'அம்போ' கூவம் ஆறு கரையோரம் குப்பை குவியல்
ADDED : ஏப் 06, 2025 11:12 PM

பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. இந்த உரக்கிடங்கு வாயிலாக மட்கும் மற்றும் மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் நோக்கில் துவக்கப்பட்டது.
பணியாளர்கள் இல்லாததால், இந்த உரக்கிடங்கு பயன்பாடில்லாமல் உள்ளது. ஆனால், அவ்வப்போது பயன்பாட்டில் உள்ளது போல், அதிகாரிகளுக்கு படம் எடுத்து அனுப்பும் பணி மட்டும் நடந்து வருவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், கூவம் ஆற்று கரையோரம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உரக்கொட்டகையும் வீணாகியுள்ளது. இந்த உரக்கிடங்கு மற்றும் உரக்கொட்டகை பயன்பாடில்லாமல் உள்ளதால், தற்போது ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, டிராக்டர் வாயிலாக கூவம் ஆற்று கரை பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் மலைபோல் குவிந்து வரும் குப்பையை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் புகையால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

