/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் வினியோகம் திருத்தணியில் தீர்வு
/
குடிநீர் வினியோகம் திருத்தணியில் தீர்வு
ADDED : ஜன 17, 2024 08:12 PM
திருத்தணி:திருத்தணி காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து, மின்மோட் டார் மூலம் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொட்டியில் இருந்து காந்திரோடு மெயின் மற்றும் குறுக்கு தெருவில் உள்ள குடும்பத்தினர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொட்டியில் குடிநீர் நிரப்பப்படாததால், மாணவர்கள் மற்றும் அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டனர்.
பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து, மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு தினமும் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.