ADDED : ஜன 30, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி : ஆரணி அடுத்த சிறுவாபுரி, அய்யனார்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சேட், 29. பூக்கடையில் மாலை கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று, இவரது மாமியார் பூங்கோதை, 58, வீட்டிற்கு வந்த போது, வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் இருந்துள்ளார். மாமியார் கண்டித்துள்ளார். கோபம் அடைந்த ராஜா, மாமியாரை தள்ளி விட்டு தாக்கினார். இது குறித்த புகாரின்படி, ஆரணி போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.